என் ஆசிரியர் அப்படி இல்லை!
கல்வியின் மகத்துவத்தை அறிந்த அவர்
அதை வெறுங் கடமையாக எண்ணியதில்லை!
கருப்போ சிவப்போ மாணவர்கள் மனதில்
அவர் வெண்மையை புகுத்திட தவறியதில்லை!
மேல்னிலையோ முதல்னிலையோ அவர் தன்
நடுவு
நிலையில்
இருந்து
நழுவியதில்லை!
காலங்கள் கடப்பினும் பலகண்டங்கள் கடப்பினும்
எப்பொழுதும்
அவரென் விழிவிட்டு விலகியதில்லை!