படிப்பது சுகமே!
ஒருவேளை உணவின்றி;மேலாடை எதுவுமின்றி
இருவேளை யறியாதுழைக்கும் அவ்வுழவன் மகனுக்கு
இலவச சீறுடை மதியவுணவு கிடைப்பின் - படிப்பது சுகமே!
காலுதவாத அந்தபெட்டிகடை அண்ணாச்சியின் மகளுக்கு
எட்ட தொலைவில் உள்ள பள்ளியை
எட்டிப் பிடித்திட நல்மிதிவண்டி கிடைப்பின் - படிப்பது சுகமே!
கொதிமண்ணில் குதிகால்வைத்து குரல்வத்த கூவிநடந்து
பிழைப்போட்டும் அந்த பழம்விற்பவள் மகனுக்கு
அனலனைக்கும் காலணி குடையென கிடைப்பின் - படிப்பது சுகமே!
மாடுமேய்க்கும் சிறுவனும் பள்ளிமொய்க்க உதவித்தொகை
வருமையிலும் வருந்தாது பள்ளிபயின்ற மாணவன்
மேலும் உயர்ந்திட ஊக்கத்தொகை கிடைப்பின் - படிப்பது சுகமே!
இன்றைய மாணவர்கள் படிப்பது சுகமே
என்று இனிதே மொழிந்திட முழுமுதற்
காரணம் - கருந்தோலடி மறைந்த அவ்வெண்ணகமே!
அப்பெருந் தலைவருக்கு தலைவணங்கும் தமிழகமே!
No comments:
Post a Comment