ஒரு கொசுவின் அரை நிமிடம்
குடி போதயில சுவரோரமா இருக்கையில
வேட்டையாட வந்த பல்லி அண்ணனுக்கு
வெடுக்குனு பறந்து வேடிக்கை காட்டிட்டு
அனல்பறக்குற ஆலவுட் மேலே அலட்டிகாம
அசந்தப்ப தன்னை பிடிக்க வந்த
குட்டி ராஜு கையிலிருந்து தப்பிச்சு
அப்பா வீசுன மின்வலைக்குள்ள ஊடுருவி
வித்தை காட்டின கொசு பயலுக்கு
தாத்தா கொடுத்த கைதட்டு...
மரணமாக ஒலித்தது.
No comments:
Post a Comment