Wednesday, March 6, 2013

diwali(deepavali)





                                                               ஒரு தீபாவளி


இவன்
பலகாரம்  சாப்பிட
பட்டாசுக்  கையை  நனைக்கிறான்

அவனோ
பலகாரம்  பற்றி  நினைக்கவே
கையை   பட்டாசாக்குகிறான்

Monday, February 25, 2013

kosuvin arai nimida vaazhkai














                 ஒரு கொசுவின் அரை நிமிடம்


குடி போதயில சுவரோரமா இருக்கையில
வேட்டையாட வந்த பல்லி அண்ணனுக்கு
வெடுக்குனு பறந்து வேடிக்கை காட்டிட்டு
அனல்பறக்குற ஆலவுட் மேலே அலட்டிகாம
அசந்தப்ப  தன்னை  பிடிக்க  வந்த
குட்டி ராஜு கையிலிருந்து தப்பிச்சு
அப்பா வீசுன மின்வலைக்குள்ள ஊடுருவி
வித்தை காட்டின கொசு பயலுக்கு
தாத்தா கொடுத்த கைதட்டு...
மரணமாக ஒலித்தது.

Friday, October 5, 2012

padippadhu sugame


 படிப்பது சுகமே!
 
ஒருவேளை உணவின்றி;மேலாடை எதுவுமின்றி
இருவேளை யறியாதுழைக்கும் அவ்வுழவன் மகனுக்கு
இலவச சீறுடை மதியவுணவு கிடைப்பின் - படிப்பது சுகமே!

காலுதவாத அந்தபெட்டிகடை அண்ணாச்சியின் மகளுக்கு
எட்ட  தொலைவில்  உள்ள  பள்ளியை
எட்டிப் பிடித்திட நல்மிதிவண்டி கிடைப்பின் - படிப்பது சுகமே!

கொதிமண்ணில் குதிகால்வைத்து குரல்வத்த கூவிநடந்து
பிழைப்போட்டும் அந்த பழம்விற்பவள் மகனுக்கு
அனலனைக்கும் காலணி குடையென கிடைப்பின் - படிப்பது சுகமே!

மாடுமேய்க்கும்  சிறுவனும் பள்ளிமொய்க்க  உதவித்தொகை
வருமையிலும்  வருந்தாது  பள்ளிபயின்ற மாணவன்
மேலும் உயர்ந்திட  ஊக்கத்தொகை  கிடைப்பின் - படிப்பது சுகமே!

இன்றைய மாணவர்கள் படிப்பது சுகமே 
என்று இனிதே மொழிந்திட முழுமுதற்
காரணம் - கருந்தோலடி மறைந்த அவ்வெண்ணகமே!
அப்பெருந் தலைவருக்கு தலைவணங்கும் தமிழகமே!